
ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி
செய்தி முன்னோட்டம்
ஆந்திரா மாநிலம் பார்வதி மான்யம் மாவட்டத்தில் உள்ள காட்ரகடா பகுதியில் ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் சுற்றி திரிந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த யானைகளை பிடிக்க வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் விளைநிலங்கள் உள்ள பகுதிகளில் மின்வேலிகளை அமைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று(மே.,12) அதிகாலை உணவு தேடி விளைநிலங்கள் உள்ள பகுதிக்கு சென்றதையடுத்து மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக 4 யானைகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 யானைகள் மின்கம்பிகளில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளன.
யானைகள் பலியானதை தொடர்ந்து அப்பகுதியின் மின்சாரஇணைப்பினை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்துள்ளார்கள்.
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் சடலங்களை மீட்டநிலையில், இதுகுறித்த விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | ஆந்திர பிரதேசம்: பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 4 யானைகள் உயிரிழப்பு
— Sun News (@sunnewstamil) May 12, 2023
மின்வேலியில் சிக்கிய மேலும் 2 யானைகள் நூலிழையில் உயிர் தப்பின
ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த… pic.twitter.com/6nTMs07YFB