Page Loader
சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம் 
சேலம் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 4 மாணவர்கள்

சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம் 

எழுதியவர் Siranjeevi
Apr 13, 2023
06:06 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு, சேலம் சங்ககிரியை அடுத்து உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கல்வடங்கம் காவிரி ஆற்றில் அரசு கலைக்கல்லூரி மாணவர் 10 பேர் குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர்களில் 4 எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்கள் உடலை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இறந்தவர்களான, முத்துசாமி, பாண்டியராஜன், மணிகண்டன், இன்னொரு மணிகண்டன் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 2 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post