Page Loader
சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு
அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

எழுதியவர் Sindhuja SM
Feb 13, 2023
11:36 am

செய்தி முன்னோட்டம்

இன்று(பிப் 13) அதிகாலை சிக்கிமின் யுக்சோம் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. யுக்சோமுக்கு வடமேற்கே 70 கிமீ தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. "நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு: 4.3, 13-02-2023 அன்று 04:15:04 IST மணிக்கு ஏற்பட்டது, அட்சரேகை: 27.81 & தீர்க்கரேகை: 87.71, ஆழம்: 10 கிமீ, இடம்: யுக்சோமுக்கு 70 கிமீ வடமேற்கே," என்று தேசிய நில அதிர்வு மையம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. நேற்று(பிப் 12) பிற்பகல் அசாமின் நாகோனில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சனிக்கிழமை(பிப் 11), குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

ட்விட்டர் அஞ்சல்

தேசிய நில அதிர்வு மையத்தின்(NCS) ட்விட்டர் பதிவு