திருப்பதி கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்கள் மாயம்
செய்தி முன்னோட்டம்
திருப்பதியில் நகலாபுரத்தில் பூபதியேஸ்வர கோனே அருவி உள்ளது.
அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்ளே அமைந்துள்ள இந்த அருவியில் இளைஞர்கள் குளிப்பது வழக்கம் என்று தெரிகிறது.
அதன்படி, சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற 5 இளைஞர்கள் இன்று(மே.,16)காலை கோனே அருவிக்கு சென்றுள்ளார்கள்.
அங்கு குளித்துக்கொண்டிருந்த அவர்கள், பக்கத்திலிருந்த பாறை ஒன்றில் ஏறி குதித்துள்ளார்கள்.
அதில் 3 பேர் பல மணிநேரம் ஆகியும் மேலேவராத காரணத்தினால் உடன்சென்ற நண்பர்கள் நகலாபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்கள்.
அதனையடுத்து சத்தியவீடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் சம்பவயிடத்திற்கு தீயணைப்பு துறையினரும், நீச்சல் வீரர்களும் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
காணாமல் போனோர் விவரங்கள் குறித்து காவல்துறையினர் தற்போது சேகரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | ஆந்திரா: திருப்பதி அருகே உள்ள கோனோ அருவியில் குளித்த சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மாயம்
— Sun News (@sunnewstamil) May 16, 2023
தண்ணீரில் குதித்த மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகிய மூவரும் நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை; அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்#SunNews | #Tirupathi |… pic.twitter.com/xi5zSENdSD