ஜம்மு&காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் பலி
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று(டிச.,21)ராணுவ வீரர்கள் பயணம் மேற்கொண்ட வாகனம்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த ஒருமாத காலத்திற்குள் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்களுள் இது 2வது-தாக்குதல் ஆகும்.
இத்தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், கூடுதல் ராணுவ படைகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.
தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி சூடு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடக்கும் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனமும் அனுப்பப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 35 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பயங்கரவாத தாக்குதல்
#BREAKING | ஜம்மு காஷ்மீர் - ரஜோரி பகுதியில் இரு ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
— Spark Media (@SparkMedia_TN) December 21, 2023
மூவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்
- ராணுவ அதிகாரிகள் pic.twitter.com/aBrc6g7END