இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா!
சீனாவில் அசுர வேகத்தில் பரவி கொண்டிருக்கும் புது வகை கொரோனாவான BF.7 வகைக் கொரோனாவால் இந்தியாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையில், சீனாவில் அதிவேகமாகப் பரவி கொண்டிருக்கும் BF.7 கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த BF.7 கொரோனவால் இன்று குஜராத்தில் 2 பேரும் ஒடிஷாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற கொரோனா ஆலோசனைக் கூட்டத்திலும் இந்த புதுவகை கொரோனாவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா, தடுப்பூசி போட்டவர்களுக்கும் வரலாம் என்றும் இது அதிகமாகவும் வேகமாகவும் பரவக்கூடிய ஒரு கொரோனா வகை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா தடுப்புக்கு இன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!
சர்வேதேச விமான பயணிகளுக்கு இன்று முதல் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். முக்கியமாக, மூத்த குடிமக்கள் இதைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 28 சதவீதம் மக்கள் மட்டுமே இந்தியாவில் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி போட்டிருப்பதால், அனைவரும் இந்த தடுப்பூசியைக் கண்டிப்பாகப் போட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ள பட்டிருக்கிறது. மேலும், அனைத்து சுகாதார அதிகாரிகளும் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று