NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைதிப் பாதைக்குத் திரும்பும் நக்சல்கள்; சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 26 பேர் சரண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைதிப் பாதைக்குத் திரும்பும் நக்சல்கள்; சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 26 பேர் சரண்
    சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 26 நக்சல்கள் சரணடைந்தனர்

    அமைதிப் பாதைக்குத் திரும்பும் நக்சல்கள்; சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 26 பேர் சரண்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 07, 2025
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, திங்கட்கிழமை (ஏப்ரல் 7) சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் 26 நக்சல்கள் பாதுகாப்புப் படையினர் முன் சரணடைந்தனர்.

    அவர்களில் மூன்று பேர் தலைக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. சத்தீஸ்கரை நக்சல் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான மாநில அரசின் பணியில் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

    மாவோயிஸ்ட் சித்தாந்தத்தின் மீதான ஏமாற்றம், கடுமையான வன வாழ்க்கை மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பிற்குள் உள்ள உள் முரண்பாடு ஆகியவை சரணடைந்த போராளிகள் தங்கள் முடிவுக்கு முதன்மைக் காரணங்களாகக் குறிப்பிட்டனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் ராய் தெரிவித்தார்.

    சரணடைந்தவர்கள்

    சரணடைந்தவர்களில் முக்கியமானவர்கள்

    சரணடைந்த நபர்கள் ஜன்மில்தியா, புரட்சிகர கட்சி குழு, ஜனதன சர்க்கார் மற்றும் தண்டகாரண்யா ஆதிவாசி கிசான் மஜ்தூர் சங்க்தன் மற்றும் சேத்னா நாட்டிய மண்டலி போன்ற அவர்களின் முன்னணி பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

    சரணடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், ஆம்தாய் பகுதி ஜன்மிலிஷியா தளபதி ராஜேஷ் காஷ்யப், ஜனதன சர்க்கார் படைத் தலைவர் கோசா மாத்வி மற்றும் சிஎன்எம்மின் சோட்டு குஞ்சம் அடங்குவர்.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 111வது, 195வது, 230வது மற்றும் 231வது பட்டாலியன்கள் மற்றும் உள்ளூர் புலனாய்வுப் பிரிவின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் சரணடைதல் எளிதாக்கப்பட்டது.

    ஜூன் 2020இல் தொடங்கப்பட்ட லோன் வர்ராட்டு மறுவாழ்வு திட்டத்தின் கீழ், மொத்தம் 953 நக்சல்கள் தண்டேவாடாவில் மட்டும் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்தீஸ்கர்
    மாவோயிஸ்ட்
    இந்தியா

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    சத்தீஸ்கர்

    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசம்
    மஹாதேவ் பெட்டிங் செயலி, சத்தீஸ்கர் முதல்வருக்கு ₹508 கோடி அளித்துள்ளது கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை முதல் அமைச்சர்
    மகாதேவ் சூதாட்ட செயலி உட்பட 22 சூதாட்ட செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் முடக்கம் அமலாக்கத்துறை

    மாவோயிஸ்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் காவல்துறை
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி சத்தீஸ்கர்
    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்  சத்தீஸ்கர்
    சத்தீஸ்கரில் பாதுகாப்பு வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்; 9 ஜவான்கள் வீரமரணம் சத்தீஸ்கர்

    இந்தியா

    பங்களாதேஷ் தேசிய தினம்; முகமது யூனூஸிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் பிரதமர் மோடி
    விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்; ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு விளாடிமிர் புடின்
    இந்தியாவில் 'BOTகள்' செய்த 2,000 விசா நியமனங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது விசா
    13 புதிய பில்லியனர்கள்; இந்தியாவின் பில்லியனர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? வணிக புதுப்பிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025