
கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநிலத்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு
செய்தி முன்னோட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருபரப்பள்ளியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று(செப்.,20)அங்கு பணிபுரியும் 200க்கும் மேலான வடமாநில தொழிலாளர்கள் தனியார் துரித உணவகத்தில் 150 கிலோ சிக்கன் ரைஸ் வாங்கி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனிடையே வாங்கி சென்ற சிக்கன் ரைஸை சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு சிறிது நேரத்திலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கிய நிலையில், அந்த உணவகத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
துரித உணவகம்
#NewsUpdate | கிருஷ்ணகிரி: உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு உடல்நலக்குறைவு!#SunNews | #Krishnagiri | #ChickenFriedRice pic.twitter.com/XM7rcdp11r
— Sun News (@sunnewstamil) September 21, 2023