Page Loader
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகும் 25 வயது தலித் பெண்மணி
கர்நாடக உயர்நீதிமன்ற சிவில் நீதிபதியாக பதவியேற்கவுள்ள தலித் பெண்மணி காயத்ரி

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகும் 25 வயது தலித் பெண்மணி

எழுதியவர் Nivetha P
Jan 19, 2023
08:33 am

செய்தி முன்னோட்டம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் பதவிக்கான இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதற்கு ஆன்லைன் மூலமாக நேரடி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரி என்னும் 25 வயது இளம்பெண் பங்குபெற்று தேர்வு எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் கோலார் மாவட்டம், பங்காருபேட்டையை சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து, அவர் விரைவில் கர்நாடக உயர்நீதிமன்ற சிவில் நீதிபதியாக பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

குவியும் வாழ்த்துக்கள்

சட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் 4வது இடத்தினை பிடித்த காயத்ரி

இளம்வயதிலேயே உயர்நீதிமன்ற சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள காயத்ரி, பங்காருபேட்டை அருகே காரஹள்ளியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் தனது பள்ளி படிப்பை படித்துள்ளார். பின்னர் அவர், கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தராய்யா சட்டக்கல்லூரியில் தனது சட்டப்படிப்பினை மேற்கொண்டுள்ளார். தனது சட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் 4வது இடத்தினை அவர் பிடித்துள்ளார். தலித் சமூகத்தை சேர்ந்த காயத்ரி தனது கடின உழைப்பால் இன்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.