2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள்!
2022ஆம் ஆண்டில் பல முக்கிய நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. அதையெல்லாம் எழுதுவதற்குள் இந்த வருடமே முடிந்து விடும். அதனால், இந்த வருடம் நிகழ்ந்த மிக முக்கியமான 10 நிகழ்வுகளை மட்டும் இப்போது பார்க்கலாம். இந்தியாவிற்கு ஜி20 மாநாட்டின் ப்ரெசிடெண்சி பதவி கிடைத்தது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் இதன் உச்சி மாநாட்டில் இதுவரை இல்லாத அளவு 43 பிரதிநிதி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவின் முதல் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஜூலை மாதம் பதவியேற்றார். 5000கிலோ மீட்டர்கள் தாண்டி தாக்கக்கூடிய போர் ஆயுதமான அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. இஸ்ரோவின் PSLV-C54, EOS-06 செயற்கைக்கோள் எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அடுத்த 6 நிகழ்வுகள்:
ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய கடற்படை கொடி மாற்றப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் 24 வாரம் வரை சட்டபூர்வாமாக கரு கலைப்பு செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. திருமணம் ஆன பெண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என்ற வரையறை இந்த உரிமைக்கு கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. போர் கப்பல் INS விக்ராந்த், போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படை மேலும் பலப்படுத்தப்பட்டன. அக்டோபர் மாதம் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 4ஜி-யை விட 10 மடங்கு அதிவேகமானது. நவம்பரில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-S ஏவப்பட்டது. மத்திய பல்கலைகழங்களில் சேர்வதற்கு பொது நுழைவு தேர்வை யுஜிசி அறிவித்தது. இதனால் பெரும் சர்ச்சையும் கிளம்பியது.