Page Loader
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி 

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி 

எழுதியவர் Sindhuja SM
Jun 19, 2024
07:55 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்று வரும் என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய இந்த கூட்டு நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. பாரமுல்லா மாவட்டத்தின் (PD) சோபோரின் ஹடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக குறிப்பிட்ட உளவுத்துறை உள்ளீடுகள் கிடைத்தை தொடர்ந்து இன்று அதிகாலை போலீசார் என்கவுன்டரை தொடங்கினர். "பயங்கரவாதிகளின் இருப்பு குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவல் கிடைத்தை அடுத்து, பிடி சோபோரின் ஹடிபோரா பகுதியில் இன்று இந்திய ராணுவம் & ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து கூட்டு நடவடிக்கையை துவக்கியது.இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்." என்று கார்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா 

நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்  பிரதமர் மோடி 

"பிடி சோபோரின் ஹடிபோரா பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர்." என்று காஷ்மீர் மண்டல காவல்துறை X இல் பதிவிட்டிருந்தது. துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இரண்டு உடல்கள் காணப்பட்டதாகவும், ஆனால் அவை இதுவரை மீட்கப்படவில்லை என்றும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப் படையினர், ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு ராணுவ ஜவான் ஆகியோர் காயமடைந்தனர். நாளை பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் போக உள்ள நிலையில், இன்று இது நடந்துள்ளது.