திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு
திருநெல்வேலியில் கடந்த 17,18ம்.,தேதிகளில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் பாதிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். இன்னமும் அப்பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று(டிச.,24)வரை திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 67 மாடுகள், 54 ஆடுகள், 28,392 கோழிகள், 135 கன்று குட்டிகள் உள்ளிட்டவை உயிரிழந்துள்ளது என்றும், அதேப்போல், 1,064பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இதனிடையே ரூ.2.87கோடி நிவாரணத்தொகை நெல்லைக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.58.14லட்சம் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.