பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள்
ஈரோடு மாவட்டத்தில் பிறந்த பெரியாருக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் ராமசாமி. இவருக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது படிப்பினை 12வது வயதில் நிறுத்திய பெரியார், வியாபாரத்தினை கவனிக்க துவங்கியுள்ளார். பின்னர் தனது 19வது வயதில் நாகம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை சில மாதங்களிலேயே இறந்து விட்டது என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் காந்தி கொள்கையை பின்பற்றி வந்த பெரியார் 1919ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் கல்விக்கான இடஒதுக்கீடு, அரசுப்பணிகளை ஒதுக்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததால் 1925ம் ஆண்டு அவர் காங்கிரஸில் இருந்து பிரிந்தார்.
தீண்டாமைக்கு எதிராக போராடிய பெரியார்
அதன்பின்னர் ராஜாஜியுடன் இணைந்து கடைசிவரை நட்பு பாராட்டிய அவர், சாதி ஒழிப்பு, தீண்டாமை, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளின் பேரில் தீவிரமாக செயல்பட்டார். இதனிடையே அவர் தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். சமூகத்தில் சரிபாதி உரிமையுள்ள பெண்களின் கைகளில் உள்ள கரண்டிகளை பிடிங்கிவிட்டு புத்தகங்களை கொடுங்கள் என்று உரக்க கூறிவந்தார். தனது கழகத்திற்கு ஓர் வாரிசு வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவரது மனைவி இறந்துவிட்ட காரணத்தினால், நாகம்மையை பெரியார் தத்தெடுக்க முடிவு செய்தார். ஆனால் அப்போதைய இந்திய சட்டப்படி பெண்களுக்கு தத்தெடுக்கவும், தத்து போகவும் உரிமை இல்லாத காரணத்தினால் அவர் தன்னை விட 40 வயது சிறிய நாகம்மையை திருமணம் செய்து கொண்டார்.
1973ம் ஆண்டு பூவுலகை விட்டு பிரிந்த பெரியார்
இது அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் தனியே பிரிந்துச்சென்று திராவிட முன்னேற்ற கழகத்தினை துவங்கி தேர்தலில் போட்டியிட துவங்கினர் என்பதே வரலாறு. ஆனால் தன் மீதான இந்த விமர்சனங்கள் எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத பெரியார் தனது 94 வயது வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைத்த வண்ணம் இருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடவேண்டியவை.
தமிழக முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
பெரியார் இம்மண்ணை விட்டு பிரிந்தாலும் அவரது கருத்துக்களும், கொள்கைகளும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(செப்.,17) பெரியாரின் 145வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, அவருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு மரியாதை செலுத்தி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. அவரை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, 'மூடநம்பிக்கை, அறியாமை என்னும் சங்கிலிகளை உடைத்தெறிய கல்வியே ஆயுதம் என கூறியவர் பெரியார். சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு பாடுபட்ட சீர்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம்' என்று தெரிவித்துள்ளார்.
சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாள்
மேலும், நடிகரும்-மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், "பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது என்பது பேரழிவு. இதனை கடைசிவரை பிரச்சாரம் செய்து வந்தவர் பெரியார். சமத்துவத்தினை ஸ்வாசமாக கொண்டு வாழ்ந்த பெரியாரின் பிறந்தநாளான இன்று அவரது கருத்துக்களை நினைவுக்கூருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வரும் நிலையில், அவருடைய பிறந்ததினம் 'சமூக நீதி தினம்' என்னும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாமக்கல்லில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, பல நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.