அடுத்த செய்திக் கட்டுரை

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - மாவட்ட நிர்வாகம்
எழுதியவர்
Nivetha P
Aug 18, 2023
06:58 pm
செய்தி முன்னோட்டம்
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி என்னும் பகுதியருகே பச்சேரி என்னும் கிராமத்தில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி ஒண்டிவீரனின் 252ம் வீரவணக்க நிகழ்ச்சியானது நடைபெறவுள்ளது.
இதற்காக இன்று(ஆகஸ்ட்.,18) மாலை 6 மணி முதல் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 10 மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதனையடுத்து சிவகிரி, நெற்கட்டும்செவல் என்னும் பகுதியில் புலித்தேவரின் 308வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கவுள்ளது.
இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் மாதம் 2ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை அமலில் இருக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
144 தடை உத்தரவு
தென்காசியில் 144 தடை உத்தரவு அமல் #Tenkasi | #Section144 pic.twitter.com/F6dz2pXge5
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 18, 2023