
உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம்
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க, 120 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு குழுவினர் போராடிவரும் நிலையில், அவர்களின் உடல் மற்றும் மனநலம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி, கட்டுமானத்தில் இருந்த சில்க்யாரா சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.
தாய்லாந்து மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த சிறப்பு மீட்பு குழுவினர், தற்போது நடந்து வரும் மீட்பு பணிகளில் இணைந்துள்ளனர். மேலும் 'அமெரிக்கன் ஆகர்' என்ற மீட்பு கருவியும் பணியமர்த்தப்பட்டுள்ளது.
இடிந்த சுரங்கத்தில் இடிபாடுகள் வழியாக 24 மீட்டர் துளையிட்டு, நான்கு குழாய்களை பொருத்தி, தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் ஆக்ஸிஜனை மீட்பு குழுவினர் வழங்கி வருகின்றனர்.
2nd card
தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநலம் குறித்து கவலை தெரிவிக்கும் மருத்துவர்கள்
சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களுக்கு, விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நீண்ட காலம் சுரங்கத்திற்குள் சிக்கி இருப்பது, அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுரங்கத்திற்குள் நீண்ட நேரம் சிக்கி இருப்பது தொழிலாளர்களுக்கு, "பேனிக் அட்டாக் என்னும் பேரச்ச தாக்கை" ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.
மேலும், சுரங்கத்தில் இருக்கும் பிராணவாயு மற்றும் கரிய அமிலவாயுவின் அளவுகள் தொழிலாளர்களின் உடல் நிலையை பாதிக்கலாம் என்றும், குளிர்ந்த நிலத்தடி வெப்பநிலை ஹைபோதெர்மியாவை உண்டாக்கலாம் என நொய்டாவை சேர்ந்த மருத்துவர் அகர்வால் பிடிஐ இடம் தெரிவித்தார்.