சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் விரைவில் AC எலக்ட்ரிக் ட்ரெயின் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
மார்ச் மாதத்திற்குள், சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் குளிர்சாதன வசதி கொண்ட எலக்ட்ரிக் ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட 12 ரேக்குகள் கொண்ட இந்த ஏசி ரயில், ஒரு பயணத்திற்கு சுமார் 5,700 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது, 1,320 பேருக்கு இருக்கை வசதி உண்டு.
இந்த ரயில் இரண்டு வாரங்களில் சென்னை கோட்டத்திடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பயணங்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இருந்து ஏசி உள்ளூர் ரயிலுக்கான சோதனை ஓட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்தில் இருந்து மார்ச் மாதம் முதல் ஏசி ரயில் அறிமுகப்படுத்தப்படலாம்.
இந்த ரயில் தற்போது இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 Come summer, Chennai Beach-Tambaram train ride to get cooler
— Namma Chennai (@NammaChennai_) February 6, 2025
The 12-rake AC train (ICF-made) seats 1,320 and carries 5,700 per trip. Trials start mid-February, with a March launch.
Tentative fare for Chennai Beach-Tambaram (28.6km) - Rs 95 pic.twitter.com/TBVjmW7Rpi
விவரங்கள்
AC எலக்ட்ரிக் ட்ரெயின் பற்றிய விவரங்கள்
தற்போதுள்ள கட்டணக் கட்டமைப்பின்படி, ஏசி மின்சார ரயில் டிக்கெட்டின் விலை- ஏசி அல்லாத முதல் வகுப்பு உள்ளூர் ரயில் டிக்கெட்டின் விலையை விட 1.3 மடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோராயமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை 28.6 கி.மீ. பயணத்திற்கு பயணிகளுக்கு ரூ.95 டிக்கெட் விலை நிர்ணையிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, விம்கோ நகரிலிருந்து விமான நிலையத்திற்கு 32 கி.மீ. பயணத்திற்கு சென்னை மெட்ரோ ₹50 வசூலிக்கிறது.
எனினும், சேவை அறிமுகப்படுத்தப்படும் போது கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.