வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன்
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோரால் ஐந்து பெண் சிறுத்தைகளும் ஏழு ஆண் சிறுத்தைகளும், குனோ தேசிய பூங்காவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளுக்குள் விடுவிக்கப்பட்டன. "மகாசிவராத்திரி அன்று மத்தியப் பிரதேசத்துக்கு ஒரு பரிசு கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு நன்றி. இது அவருடைய தொலைநோக்கு திட்டமாகும். 12 சிறுத்தைகளுக்கு குனோவில் மறுவாழ்வு அளிக்கப்படும். முன்பு வந்த சிறுத்தைகள் நிலைமைக்கு ஏற்றவாறு நன்றாகவே மாறிவிட்டன." என்று முதலமைச்சர் கூறியுள்ளார். சிறுத்தைகளுக்கான காப்பகத்தில் 10 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய வனவிலங்கு சட்டங்களின்படி, விலங்குகள் புதிதாக நாட்டிற்குள் வந்தால் அவை 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.