Page Loader
கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி
கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

எழுதியவர் Nivetha P
Mar 01, 2023
05:46 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா பரவல் காரணமாக 2020-21ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் 9,30,000 மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டு, 9ம் வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் அளிக்கப்பட்ட சான்றிதழ்களை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். தொடர்ந்து தற்போது, ரயில்வேயில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்தி 769 பேருக்கு பணியிடங்கள், குரூப் டி பணியிடங்கள், 40,889 தபால் துறை பணியிடங்கள், பெங்களூர் ரயில் வீல் தொழிற்சாலையில் 4,103 அப்பரண்டிஸ் பணிகள் ஆகியவற்றிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கு தள்ளுபடி

தேர்வு நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்க முடியாது

மேற்கூறிய குறிப்பிட்ட பணிகளில் விண்ணப்பிக்கவும், சேரவும் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம். எனவே, மதிப்பெண்கள் கொடுக்கப்பட்ட சான்றிதழை அளிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர், இது போன்ற ஏற்கனவே ஓர் வழக்கில் தேர்வு நடத்தாமல் மதிப்பெண்கள் அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எடுத்துரைத்தார். அவர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.