NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
    தேர்ந்தெடுக்கப்படும் 108 அதிகாரிகளும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட இருக்கிறார்கள்

    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 20, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ராணுவம், லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து கர்னலாக பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக சிறப்பு தேர்வு வாரியத்தை நடத்தி வருகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க இந்திய ராணுவம் முன் வந்திருக்கிறது. இது ஜனவரி-9 முதல் ஜனவரி-22 வரை நடத்தப்படுகிறது.

    ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, பல்வேறு ஆயுதங்கள் மற்றும் சேவை பிரிவுகளில் இருக்கும் காலி இடங்களுக்கு இந்த சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது.

    1992 பேட்ச் முதல் 2006 பேட்ச் வரையுள்ள 244 பெண் அதிகாரிகள் 108 காலியிடங்களுக்கு பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்படுகிறார்கள்.

    பெண் அதிகாரிகள்

    வரலாற்றில் முதல் முறை

    இந்திய ராணுவத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் இந்த சிறப்பு எண்-3 காலியிடங்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

    மொத்தம் 60 பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் தேர்வு வாரியத்திற்கு பார்வையாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். நியாயமான நடத்தையை உறுதிப்படுத்தவும், அவர்களின் அச்சங்கள் ஏதேனும் இருந்தால் தெளிவுபடுத்தவும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்படும் இந்த 108 அதிகாரிகளும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட இருக்கிறார்கள்.

    அத்தகைய பதவிகளின் முதல் தொகுப்பு ஜனவரி 2023 இறுதிக்குள் வழங்கப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெண் அதிகாரிகள் இது போன்ற ராணுவ உயர் பதவிகளில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    திருமண-பலாத்கார வழக்கு: என்ன சொல்கிறது மத்திய அரசு இந்தியா
    மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்! எலக்ட்ரிக் கார்
    இந்திய விண்வெளி மையத்தில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை இந்தியா
    செவ்வாய் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025