NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
    இந்தியா

    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
    எழுதியவர் Sayee Priyadarshini
    Jan 21, 2023, 12:41 pm 1 நிமிட வாசிப்பு
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
    லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து கர்னலாக பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    இந்திய ராணுவம், லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து கர்னலாக பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக சிறப்பு தேர்வு வாரியத்தை நடத்தி வருகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. தி ஹிந்துவில் இதைப்பற்றிய முழு கவரேஜ் இங்கே. இது ஜனவரி-9 முதல் ஜனவரி-22 வரை நடத்தப்படுகிறது. ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, பல்வேறு ஆயுதங்கள் மற்றும் சேவை பிரிவுகளில் இருக்கும் காலி இடங்களுக்கு இந்த சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. 1992 பேட்ச் முதல் 2006 பேட்ச் வரையுள்ள 244 பெண் அதிகாரிகள் 108 காலியிடங்களுக்கு பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்படுகிறார்கள்.

    மதுரை விமான நிலையத்தின் பிரிவுகள்

    Madurai Airport has been accorded No. 1 in thematic decoration among Category-II airports in India. Thanks to our beloved APD Mr. Rao for making this happen. @aaimduairport @AAI_Official @sureshpprabhu @MoCA_GoI @jayantsinha pic.twitter.com/yOlNufgfpY

    — Madurai Airport (@MaduraiAirport) September 6, 2018

    வரலாற்றில் முதல் முறை

    இந்திய ராணுவத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் இந்த சிறப்பு எண்-3 காலியிடங்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 60 பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் தேர்வு வாரியத்திற்கு பார்வையாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். நியாயமான நடத்தையை உறுதிப்படுத்தவும், அவர்களின் அச்சங்கள் ஏதேனும் இருந்தால் தெளிவுபடுத்தவும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் இந்த 108 அதிகாரிகளும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். அத்தகைய பதவிகளின் முதல் தொகுப்பு ஜனவரி 2023 இறுதிக்குள் வழங்கப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண் அதிகாரிகள் இது போன்ற ராணுவ உயர் பதவிகளில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    கிரிக்கெட்

    BANvsIRE முதல் டி20 : அயர்லாந்தை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம் டி20 கிரிக்கெட்
    சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் : சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக சந்தீப் சர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் 2023

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023