
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எப்போது, எங்கே பார்க்கலாம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில், 2024-25 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.
குறிப்பாக 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 முதல் 25 வரை, 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன.
இந்த நிலையில் பொது தேர்வு முடிவுகள் எங்கே, எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதை பற்றி தெரிந்துகொள்ள மேற்கொண்டு படியுங்கள்:
விவரங்கள்
பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தும் தேதி, முடிவுகள் வெளியிடும் தேதி
12-ம் வகுப்பு (பொதுத்தேர்வு):
விடைத்தாள் திருத்தும் காலம்: ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 17 வரை.
முடிவுகள் வெளியீட்டு தேதி: மே 9, 2025.
11-ம் வகுப்பு (பொதுத்தேர்வு):
விடைத்தாள் திருத்தும் காலம்: ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 30 வரை.
முடிவுகள் வெளியீட்டு தேதி: மே 19, 2025.
10-ம் வகுப்பு (பொதுத்தேர்வு):
தேர்வு நடைபெறும் காலம்: மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை.
விடைத்தாள் திருத்தும் காலம்: தேர்வு முடிவடைந்தவுடன் தொடங்கப்படும்.
முடிவுகள் வெளியீட்டு தேதி: மே 19, 2025
எங்கே பார்க்கலாம்
தேர்வு முடிவுகளை அறிய வழிகள்:
தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in, http://www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in, http://www.dge.tn.gov.in என்ற தளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்படும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் கட்டணமின்றி முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அதோடு தேர்வில் பயன்படுத்திய மொபைல் எண்ணிற்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.