
சுதந்திர தினம்: செங்கோட்டையில் 10,000 போலீசார் பாதுகாப்பு
செய்தி முன்னோட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பிற்காக செங்கோட்டையில் 1,000 முக அடையாளம் காணும் கேமராக்களும், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் கட்டுப்பாடுகளால் அதிக கூட்டம் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அதனால், இந்த வருடம் சுதந்திர தின கொண்டாட்டத்தில் அதிக கூட்டம் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், 77 வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், ஹரியானாவில் சமீபத்தில் நடந்த வன்முறை கலவரங்களையும் கருத்தில் எடுத்து கொண்டு, வலுவான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டிஜிக்
1,800 சிறப்பு விருந்தினர்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்
பிரதமர்-கிசான் திட்டத்தின் பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களை அரசாங்கம் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைத்துள்ளது.
இந்த ஆண்டு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க உள்ளனர்.
சுதந்திர தின விழாவிற்காக செங்கோட்டை மலர்களாலும் G20 அடையாளங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி முடியும் வரை செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் காத்தடிகள் உட்பட எதையும் பறக்க விடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் போது, மேடைக்கு அருகே ஒரு காத்தாடி தரையிறங்கியது.
அதனால், தேவையான உபகரணங்களுடன் மொத்தம் 153 காத்தாடி பிடிப்பவர்கள் மூலோபாய இடங்களில் நிறுத்தப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.