திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தில், சில்சாரில் இருந்து அகர்தலா நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 221.96 கிராம் போதை பொருளை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) செவ்வாய்கிழமை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பயணிகளின் கூட்டத்தைப் பயன்படுத்தி சந்தேக நபர் நழுவிவிட்டார் என்று BSF தெரிவித்துள்ளது. போதை பொருள் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குமார் காட் ரயில் நிலையத்தில் BSF குழுவினரால் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்போது, சில்சாரிலிருந்து அகர்தலா சென்று கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
திரிபுராவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற பாடுபடும் BSF
"தேடலின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் இருந்து சுமார் 221.96 கிராம் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேக நபர், பயணிகளின் கூட்டத்தைப் சாதகமாக பயன்படுத்தி கொண்டு நழுவினார்," என்று BSF தெரிவித்துள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட பிரவுன் சுகரின் தோராயமான மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் ரூ.1,10,98,000 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையானது திரிபுராவில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கவும், "திரிபுராவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக" உருவாக்கவும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக BSF தெரிவித்துள்ளது.