Page Loader
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு இணையும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் 
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு இணையும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர்

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு இணையும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் 

எழுதியவர் Nivetha P
Jul 16, 2023
02:50 pm

செய்தி முன்னோட்டம்

இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண்.305ல் கடவுள் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் மூலம் மக்களை ஈர்த்தவர் இயக்குனர் சிம்பு தேவன். ஆனால் அவர் விஜய்யை வைத்து இயக்கிய புலி திரைப்படம் பெரும் தோல்வியினை தழுவியது. அதன்பின்னர் சிம்பு தேவன் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது யோகி பாபு அவர்களை வைத்து ஒரு படத்தினை சிம்பு தேவன் இயக்குகிறார் என்னும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்கமுழுக்க கடலில் எடுக்கப்பட்ட சரித்திர படம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையில் இப்படம் உருவாகவுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் டைட்டில் போஸ்டரினை இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு 'போட்' என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

யோகி பாபுவின் புது பட டைட்டில் வீடியோ