யஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! 'டாக்ஸிக்' ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்
செய்தி முன்னோட்டம்
கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு யஷ் நடித்துள்ள திரைப்படம் 'டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்'. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் வரும் மார்ச் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. எனினும் தற்போது படத்தின் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. சர்வதேச சந்தையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், போர் சூழலால் உலகளாவிய வசூலில் பாதிப்பை சந்திக்கக்கூடும் எனத் தயாரிப்பு நிறுவனம் கருதுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Toxic : A Fairy Tale for Grown-Ups - in Cinemas Worldwide on 4 June 2026 pic.twitter.com/tg28qLUooH
— KVN Productions (@KvnProductions) March 4, 2026
சிறப்பம்சங்கள்
படத்தின் சிறப்பம்சங்கள்
இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சர்வதேச ரசிகர்களைக் கவரும் வகையில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். ஆனால், மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழல் எங்கள் இலக்கை எட்டுவதில் தடையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ரசிகர்களின் நலன் கருதி படத்தின் வெளியீட்டை ஜூன் 4, 2026-க்கு ஒத்திவைக்கிறோம்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யஷ் கேங்ஸ்டராக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 'டாக்ஸிக்' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதால், மார்ச் 19-ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'துரந்தர் 2' திரைப்படம் தனித்து வெளியாகிறது.