
இந்தியாவில் X-Box கேம் பாஸ்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் எக்ஸ்-பாக்ஸ் கேம் பாஸ் மெம்பர்ஷிப் அமேசான் தளத்தில் விற்பனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.499-க்கு இந்த எக்ஸ்-பாக்ஸ் கேம் பாஸ் மெம்பர்ஷிப்பை நாம் பெற்றுக் கொள்ள முடியும். மைக்ரோசாப்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து வாங்குவதை விட, ஆன்லைன் விற்பனை தளத்தில் வாங்கும் போது நமக்கு வரிகள் எதுவும் சேர்ந்து இருக்காது.
ரூ.499-க்கான இந்த கேம் பாஸ் அல்டிமேட் மெம்பர்ஷிப்பானது ஒரு மாதத்திற்கானது மட்டுமே. இதனைக் கொண்டு ஒரு மாதத்திற்கு எக்ஸ்-பாக்ஸில் நூற்றுக்கும் மேற்பட்ட கேம்களை விளையாடலாம் என்றும், EA விளையாட்டுகளும் இதில் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ரூ.1,499-க்கும் மூன்று மாதங்களுக்கான கேம் பாஸ்களும் அமேசான் தளத்தில் விற்பனையில் இருக்கின்றன.
வீடியோ கேம்
அதிகாரப்பூர்வ விற்பனை:
கடந்த மாதம் ரூ.50-க்கு சோதனை முறையில் வெளியிட்ட கேம் பாஸ்களை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
ஃப்ளிப்கார்ட் தளத்திலும் எக்ஸ்-பாக்ஸ் கேம் பாஸ்கள் விற்பனையில் இருக்கின்றன. ஆனால், அவை அதிகாரப்பூர்வமானவை கிடையாது. மூன்றாம் தர விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்படுவது, எனவே விலையும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான கேம் பாஸ் சேவையை கடந்தாண்டு அயர்லாந்து மற்றும் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட். தற்போது அதனை மேலும் 6 நாடுகளில் விரிவுபடுத்தியிருக்கிறது. விரைவில் அந்த சேவையை இந்தியாவிலும் மைக்ரோசாப்ட் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.