இன்று உலக ஹாரி பாட்டர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்
90'களில் வெளியான பிரபலமான ஆங்கில புத்தகம் Harry Potter. அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஹாரி பாட்டர் புத்தகத்தின் எழுத்தாளரான ஜே.கே. ரௌலிங்கின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் இந்த நாளை, அதிகாரப்பூர்வ சர்வதேச தினமாக அறிவித்தார். இந்த ஹாரி பாட்டர் தொடரின் கடைசி தொகுதி வெளியிடப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும், அதன் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சுற்றியுள்ள ஆர்வம் குறையவில்லை என்றுதான் கூறவேண்டும். 7 அத்தியாயங்களாக வெளியான இந்த தொடரின் முதல் புத்தகம், 1997-ஆம் ஆண்டு வெளியானது. இறுதி அத்தியாயம் 2007 ஆண்டு வெளியானது.
சாதனை படைத்த புத்தக விற்பனை
ஏழாவது புத்தகம், வெளியான 24 மணி நேரத்தில், 11 மில்லியன் பிரதிகள் விற்று, வரலாற்றில் 'மிக வேகமாக விற்பனையான புத்தகம்' என்ற சாதனையை படைத்தது. இதுவரை உலகளவில், 600 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி, வரலாற்றில் அதிகம் விற்பனையான புத்தகத் தொடராக அமைந்தது ஹாரி பாட்டர். இந்தத் தொடர், தற்போது 85 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த 7 புத்தகங்களும், 8 திரைப்படங்களாக எடுக்கப்பட்டது. புத்தகத்தின் கடைசி அத்தியாயம், இரண்டு பாகமாக எடுக்கப்பட்டது. அதில் நடைபெறும் சண்டை காட்சி, May 2 அன்று நடைபெற்றதாகவும், அதனால் ஹாரி பாட்டர் நினைவாக இந்த நாளை தேர்வு செய்துள்ளனர் எனக்கூறுகிறார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் விரும்பும் மாயாஜால உலகை கண்முன்னே கொண்டுவந்த எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங்கிற்கு நன்றிகள்!