முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா வாழ்த்து கூறாதது ஏன்? பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி.ஜோசப் விஜய் ஜூன் 22 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அரசியல் தலைவர்கள், திரை உலகப் பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்குத் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் வேளையில், திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் மௌனம் தற்பொழுது இணையவாசிகள் மற்றும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
சமூக வலைதளங்கள்
எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நிலவும் மௌனம்
கடந்த சில ஆண்டுகளாக, நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் போதெல்லாம் நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கங்களான எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் சிறப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்து தவெக தலைவருக்கு தனது வாழ்த்துகளைத் தவறாமல் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், நடப்பு 2026 ஆம் ஆண்டு விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்ற போதிலும், த்ரிஷாவிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ வாழ்த்துப் பதிவும் வராதது ரசிகர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பழைய வதந்திகள்
தேர்தல் வெற்றிக் கொண்டாட்டமும் பழைய வதந்திகளும்
கடந்த மே 4 அன்று த்ரிஷாவின் பிறந்தநாளின் போதுதான், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விஜய்யின் தவெக கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது. அந்த இரட்டை சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது த்ரிஷா, திருப்பதிக்குச் சென்றுவிட்டு நேரடியாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். ராதிகா சரத்குமார், சார்மி மற்றும் லட்சுமி மஞ்சு போன்ற சக நடிகைகள் கூட விஜய்யின் இந்த மெகா வெற்றியைத் த்ரிஷாவின் லக்கி மாஸ்காட் அதிர்ஷ்டத்தோடு ஒப்பிட்டுப் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்திருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.
அரசியல் காரணங்கள்
வாழ்த்து சொல்லாததற்குக் கூறப்படும் அரசியல் காரணங்கள்
விஜய்யின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும், அதற்குத் த்ரிஷாவுடனான வதந்திகளே காரணம் எனச் சில தரப்பினர் அவதூறுகளைப் பரப்புவதும் கடந்த காலங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தின. தற்போது விஜய் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயரிய பொறுப்பில் உள்ளதால், தற்பொழுது பகிரங்கமாகத் தான் பதிவிடும் சாதாரண வாழ்த்துக்கள் கூட தேவையற்ற அரசியல் மற்றும் தனிநபர் விமர்சனங்களுக்கு வழிவகுத்து விடக்கூடாது என்பதற்காகவே த்ரிஷா இந்த முறை சமூக வலைத்தளங்களில் மௌனத்தை கடைபிடித்திருக்கலாம் என விபரமறிந்த சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.