ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?
அகாடமி விருது என அழைக்கப்படும் ஆஸ்கார் விருதுகள் கடந்த மாத இறுதியில் சில பிரிவுகளின் கீழ் தனது இறுதி பட்டியலை அறிவித்து இருந்தது. இவ்வாறு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்னென்ன? அவற்றை நீங்கள் எங்கு பார்க்கலாம் என்பதை பின்வருமாறு பார்ப்போம். டாம் குரூஸ் நடிப்பில் வெளிவந்த அதிரடி திரைப்படம் 'டாப் கன்: மேவரிக்.' இது 1986-ல் வெளியான டாப் கன் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பார்க்கலாம். அடுத்ததாக மார்ட்டின் மெக்டொனாக் இயக்கத்தில் வெளிவந்த 'இனிஷெரின் பன்ஷீஸ்' படம். இந்த படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை பெற்றது. இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல்
அமெரிக்க பிரபல பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் 'எல்விஸ்' ஆகும். இப்படத்தை அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்.' இப்படம் உலகளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது. இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். அடுத்ததாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' படம். படம் நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜி5 போன்ற ஓடிடி தளங்களில் பார்க்கலாம். டேமியன் சாசெல்லின் இயக்கத்தில் உருவான படம் 'பாபிலோன்.' இதன் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை. இந்த படம் பாராமென்ட் மற்றும் வூட் ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.