
'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல்
செய்தி முன்னோட்டம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த 'Thug Life' ப்ரோமோஷன் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் ஒரு தனியார் சேனலுக்கு கமல் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது,"முதல்முறையாக ஒரு லெஜெண்ட்(கமல்) உடன் நியூ பாய் (சிம்பு) நடிக்கப்போகிறீர்கள் என பலரும் சிம்புவிடம் கூறினார்கள். அப்போது அந்த லெஜெண்ட் வந்து 'அவர்கள் கூறுவதை நினைத்து கலங்க வேண்டாம்..உங்கள் நடிப்பில் கவனம் செலுத்தினால் போதும்' என்றேன்...அதற்கு அந்த நியூ பாய்(சிம்பு) 'சார்..நீங்களும் நான் நியூ பாய் என நினைத்து அசால்ட்டாக இருந்திட வேண்டாம்..உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்' என்றார்".
கமலுடன் தக் லைஃப் மொமெண்ட் காட்டிய சிம்புவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Bro is a real life thug!!#SilambarasanTR pic.twitter.com/yqzlYqnOUX
— Silambarasan TR Spotlight (@STR_Spotlight) May 15, 2025
ட்ரெய்லர்
'தக் லைஃப்' பட ட்ரெய்லர் நாளை வெளியீடு
'தக் லைஃப்' படத்தின் ட்ரெய்லர் நாளை (மே 17) வெளியாக உள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தையொட்டி, படத்தின் விளம்பர பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக படக்குழு முன்பே அறிவித்திருந்தது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் புரோமோஷன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
நாளை ட்ரெய்லர் வெளியாகும் நிலையில் மே 24 அன்று சென்னையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
விளம்பர பணிகளின் ஒரு பகுதியாக கமல்ஹாசன், சிலம்பரசன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Cinema • Student • Music #Thuglife ♥️ pic.twitter.com/OYRIL5tvrJ
— Silambarasan TR (@SilambarasanTR_) May 15, 2025