LOADING...
ரிலீஸ் தேதியை மாற்றிய வி.ஜே.சித்துவின் டயங்கரம் படக்குழு - புதிய தேதி இதோ
விஜே சித்துவின் டயங்கரம் பட ரிலீஸ் தேதி மாற்றம்

ரிலீஸ் தேதியை மாற்றிய வி.ஜே.சித்துவின் டயங்கரம் படக்குழு - புதிய தேதி இதோ

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2026
05:21 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல தமிழ் யூடியூபரும் நடிகருமான வி.ஜே.சித்து எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள டயங்கரம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியைத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை மாத இறுதியில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பட வெளியீடு

படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

முன்னதாக, டயங்கரம் திரைப்படத்தை வரும் ஜூன் மாதத்தில் கோடை கால ஸ்பெஷலாக வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போதைய இறுதி கட்டப் பணிகளின் காரணமாகப் படத்தின் ரிலீஸ் தேதி ஒரு மாதம் தாமதிக்கப்பட்டு, தற்போது ஜூலை இறுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் அதிகாரப்பூர்வமாகத் உறுதிப்படுத்தியுள்ளார்.

திரைப்படம்

திரைப்படத்தின் சிறப்பம்சங்கள்

நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பிராங் ஷோக்கள் மூலமாகவும் சித்து விளாக்ஸ் யூடியூப் சேனல் வழியாகவும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த வி.ஜே.சித்து, இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது 'இனி பயங்கரம் இல்ல, டயங்கரம்' என்ற உலகப் புகழ்பெற்ற வ்லாக் வசனத்தையே படக்குழுவினர் இந்தத் திரைப்படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளனர். காமெடி மற்றும் எமோஷன் கலந்த பக்கா யூத்ஃபுல் கமர்ஷியல் கதையாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' திரைப்படத்தில் வி.ஜே.சித்து நடித்த முக்கியக் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நடிகர்கள்

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் வி.ஜே.சித்துவுடன் இணைந்து நட்டி நடராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் மற்றும் கதிர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். லவ் டுடே பட புகழ் பிரதீப் ஈ. ராகவ் இத்திரைப்படத்தின் விறுவிறுப்பான படத்தொகுப்புப் பணிகளைக் கையாண்டுள்ளார்.

Advertisement