விஜே சித்துவின் 'டயங்கரம்' டீசர் வெளியீடு: பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என படக்குழு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
"நம்ம பண்ண போற சம்பவம் காலத்துக்கும்..." என்கிற அனல் பறக்கும் வசனத்தோடு, பிரபல யூடியூபர் விஜே சித்து எழுதி, இயக்கி, கதாநாயகனாக களமிறங்கியுள்ள 'டயங்கரம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான 'டிராகன்' படத்தில் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த விஜே சித்து, தற்போது முதல்முறையாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சித்து குமார் இசை
வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இளம் இசை அமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.
டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் பின்னணி இசையும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைக்கும் வகையில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதமே முழு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக முடிக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர் சோஷியல் மீடியா ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
பொங்கல் ரிலீஸ்
நட்சத்திர பட்டாளம்
நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா போன்ற அனுபவமிக்க நடிகர்களுடன் ஹர்ஷத் கான், ஆதித்யா கதிர், சுஷ்மிதா ஷெட்டி மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் மல்லேஷ் கண்ணன் என நட்சத்திரப் பட்டாளமே இந்த கமர்ஷியல் எண்டர்டெய்னரில் கைகோர்த்துள்ளனர்.
இளைஞர்களின் நாடிபிடித்த இந்த கூட்டணி திரையில் என்ன மேஜிக் நிகழ்த்தப் போகிறது என்கிற ஆவலை டீசர் எகிற வைத்துள்ளது.
அத்துடன், தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரியில் படம் உலகமெங்கும் திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், பொங்கல் பாக்ஸ் ஆபிஸ் பந்தயத்தில் 'டயங்கரம்' பெரும் கலக்கு கலக்கும் என திரைத்துறையினர் கணிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Pongal virunthuku ready aagunga prandsss...😉❤️🔥#DayangaramPongal
— Vels Film International (@VelsFilmIntl) November 3, 2026
Link: https://t.co/qPQ5YCVBd0
Directed by @VJSiddhuOG
Produced by @IshariKGanesh@IshariKGanesh @kushmithaganesh @Music_Siddhu @natty_nataraj @PradeepERagav @dineshkrishnanb @meevinn @prosathish…