
'விஸ்வம்பரா': சிரஞ்சீவியின் 69வது பிறந்தநாளில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு படவுலகில் மெகாஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 69வது பிறந்தநாளில், அவரது வரவிருக்கும் படமான விஸ்வம்பராவின் தயாரிப்பாளர்கள், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர் UV கிரியேஷன்ஸின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் பகிரப்பட்டது.
இந்த புதிய தோற்றத்தில், சிரஞ்சீவி சக்தி வாய்ந்தவராகவும், உக்கிரமானவராகவும் தோன்றி, படத்தில் அவரது பாத்திரத்திற்கு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார். இப்படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார்.
இப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கொண்டாட்டங்கள்
சிரஞ்சீவி பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்
அவரது 69வது பிறந்தநாளை முன்னிட்டு, சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா, மற்றும் பேத்தியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றனர்.
மிகவும் எளிமையாக, ஆர்பாட்டமின்றி வந்திறங்கிய இவர்களை உடனே கண்டுகொண்ட ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்த சிறப்பு நாளில், சிரஞ்சீவிக்கு, அவரது ரசிகர்களும், திரையுலகத்தினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிரஞ்சீவி கடைசியாக 2023இல் வெளியான போலா ஷங்கர் மற்றும் வால்டேர் வீரய்யா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
'விஸ்வம்பரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
Happiest Birthday to the mightiest MEGASTAR @KChiruTweets 💫
— UV Creations (@UV_Creations) August 22, 2024
Get ready for the MEGA MASS BEYOND UNIVERSE with #Vishwambhara 🔥#HBDMegaStar@trishtrashers @AshikaRanganath @DirVassishta @kapoorkkunal @mmkeeravaani @NaiduChota @mayukhadithya @sreevibes @gavireddy_srinu… pic.twitter.com/0o1nKNGVrN