LOADING...
'கண்ணப்பா' படத்தின் டிரெய்லர் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது
'கண்ணப்பா' ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது

'கண்ணப்பா' படத்தின் டிரெய்லர் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2025
02:22 pm

செய்தி முன்னோட்டம்

பல தாமதங்களைச் சந்தித்த பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இதிகாச திரைப்படமான 'கண்ணப்பா' ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே, இப்படத்தின் டிரெய்லர் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். முகேஷ் குமார் சிங் இயக்கி, தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு முக்கிய வேடத்தில் நடித்த 'கண்ணப்பா' திரைப்படம், ஒரு சிவபக்தரின் கதையை அடிப்படையாகக் கொண்டது.

நட்சத்திரங்கள்

பல முன்னணி நட்சத்திரங்கள் இணையும் மெகா திரைப்படம்

இப்படத்தில் பல மொழி திரையுலகின் மெகா நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால், பிரபாஸ் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, மது, ப்ரீத்தி முகுந்தன், பிரம்மாஜி மற்றும் சுரேகா வாணி ஆகியோரும் உள்ளனர். விஷ்ணு மஞ்சு இந்தப் படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், அதன் திரைக்கதையையும் எழுதியுள்ளார். கண்ணப்பா படத்திற்கு விஜய் டிவி புகழ் ஸ்டீபன் தேவஸ்ஸி இசையமைத்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post