Page Loader
விஷால்- சுந்தர்.சி-யின் மதகஜராஜா க்லிம்ப்ஸ் வீடியோ வெளியானது: காண்க

விஷால்- சுந்தர்.சி-யின் மதகஜராஜா க்லிம்ப்ஸ் வீடியோ வெளியானது: காண்க

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2025
06:54 pm

செய்தி முன்னோட்டம்

12 ஆண்டுகள் கழித்து வெளியாகவுள்ள விஷால்- சுந்தர்.சி-யின் மதகஜராஜாவின் க்லிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில்,விஷால் நடிக்க, நிதி சிக்கல்களால் 2013 முதல் கிடப்பில் கிடந்த இந்த படத்தில், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மதகஜராஜா 2013 இல் படப்பிடிப்பு நிறைவு செய்து, நிதி சிக்கல்களால் நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருந்தது. திரைப்படத் தயாரிப்பாளர் சுந்தர் சி இயக்கத்தில், மதகஜராஜா, சுந்தர்.சி படத்தை போலவே காமெடி- குடும்ப பாடமாக உருவாகியுள்ளது. படத்திற்கு இசையமைத்திருப்பது விஜய் ஆண்டனி. இதை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ளது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் மூன்றாவது படம் மதகஜராஜா.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post