வெளிநாட்டில் இளம் பெண்ணுடன் வலம் வந்த நடிகர் விஷால்: முகத்தை மூடிக்கொண்டு ஓடும் காட்சி வைரல்
வெளிநாட்டில் நடிகர் விஷால் ஒரு இளம் பெண்ணுடன் வலம் வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் நடிகர் விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. கடந்த காலங்களில் விஷால் சில ஹீரோயின்களை காதலித்தார் என்ற கிசுகிசுப்புகள் பல முறை வெளியாகி இருக்கின்றன. ஆனால், அவர் இது போன்ற ஊகங்கள் அனைத்தும் மறுத்துவிட்டார். இந்நிலையில், விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஒரு வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விஷால் ஒரு இளம் பெண்ணின் தோளில் கைபோட்டு நடந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால், அது விஷால் தானா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.