3வது முறையாக இணைந்த விஷால் - ஹரி கூட்டணி - பூஜையுடன் தொடக்கம்!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் ஹரியுடன் மீண்டும் விஷால் கூட்டணி சேர உள்ளார். நடிகர் விஷால் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை படத்தில் நடித்திருந்தார். கடந்த 2007 ஆம் ஆண்டில் வெளியான தாமிரபரணி படமானது மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில், 3 வது முறையாக விஷால் மற்றும் ஹரி கூட்டணியில், படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் விஷால் 24 என்ற பெயரில் பூஜையுடன் தொடங்கியுள்ளனர். மேலும், கார்த்திக் தங்கவேல், ஹரி, பாண்டியராஜ் உள்ளிட்டோரின் படங்களில் நடிக்க விஷால் ஒப்பந்தமாகியிருந்தார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.