LOADING...
விஷாலின் புதிய அவதாரம்; மகுடம் திரைப்படத்தை இயக்குவதை உறுதி செய்தார்
மகுடன் படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்

விஷாலின் புதிய அவதாரம்; மகுடம் திரைப்படத்தை இயக்குவதை உறுதி செய்தார்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 20, 2025
08:15 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஷால் இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அவர் தனது வரவிருக்கும் படமான மகுடம் மூலம் இயக்குனராகத் தனது புதிய அவதாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்தச் சிறப்பான நாளில், எனது புதிய திரைப்படமான மகுடம் படத்தின் இரண்டாவது போஸ்டரை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு, படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே எடுத்திருந்த ஒரு முக்கியமான முடிவை இப்போது நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். மகுடம் திரைப்படம் எனது திரையுலகப் பயணத்தில் நான் இயக்குனராக எடுக்கும் முதல் முயற்சி." என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவு 

பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு

இந்த முடிவானது எதிர்பார்த்திராத சூழ்நிலையால் எடுக்கப்பட்டது என்றாலும், இது கட்டாயத்தின் பேரில் அல்லாமல், தனது தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் விஷால் விளக்கமளித்துள்ளார். நடிகராகத் தான் நம்பும் திரையுலகிற்கும், தன்னை நம்பும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையைக் காக்கும் பொறுப்பு தனக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, மகுடம் படத்தின் காட்சிகளை விஷால் இயக்குவது போன்ற படங்கள் வெளிவந்த நிலையில், இதன் ஆரம்பகட்ட இயக்குனர் ரவி அரசு நீக்கப்பட்டு, விஷாலே இயக்குவார் என்ற செய்தி இன்று உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் படத்தின் போஸ்டரில், கதை ரவி அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.