
'லியோ' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நாளை(அக்.,19) மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'லியோ'.
இப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. மற்ற மாநிலங்களில் 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலை 9 மணி காட்சிக்கு தான் அனுமதி கிடைத்துள்ளது.
இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், ஒரு வழியாக நாளை படம் வெளியாகவுள்ளது என்னும் சந்தோஷத்தை அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அண்மையில் இப்படத்தின் இயக்குனர், செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று இப்படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து, நடிகர் விஷால், 'இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். எனது வாழ்த்துக்கள்' என்று கூறி இணையத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
விஷாலின் வாழ்த்து வீடியோ பதிவு
Watch | "லியோ படத்தை தியேட்டரில் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.. நானும் தியேட்டர் போய் பார்க்கவுள்ளேன்"
வீடியோ வெளியிட்டு நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தை வாழ்த்தினார் நடிகர் விஷால்!#SunNews | #Leo | @actorvijay | @VishalKOfficial pic.twitter.com/Fw3P6OdAzn — Sun News (@sunnewstamil) October 18, 2023