LOADING...
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரி 26-ல் உறுதி; உதய்ப்பூருக்கு பறந்த ஜோடி
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரி 26-ல்!

விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரி 26-ல் உறுதி; உதய்ப்பூருக்கு பறந்த ஜோடி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2026
12:47 pm

செய்தி முன்னோட்டம்

காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று இரவு இந்த ஜோடி ஒரு நெகிழ்ச்சியான இன்ஸ்டா அறிக்கையை வெளியிட்டது. அதில், ரசிகர்கள் தங்களுக்கு அன்புடன் சூட்டிய 'VIROSH' என்ற பெயரிலேயே தங்கள் திருமணத்தை 'The Wedding of VIROSH' என்று அழைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா ஜோடி வரும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் உள்ள ஒரு பாரம்பரிய அரண்மனையில் திருமணம் செய்து கொள்ள போவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதனையொட்டி வரும் பிப்ரவரி 24-ல் ஹல்டி வைபவத்துடன் இந்த திருமண நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக இந்த ஜோடி தங்கள் குடும்பத்தினருடன் இன்று உதய்ப்பூர் பறந்துள்ளனர். இதன் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

விவரங்கள்

நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருமணம் நிகழ்வு

திருமண விழாவில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு 'No-Phone' பாலிசி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டிலிருந்து சிறப்பு பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளது. உதய்ப்பூர் திருமண நிகழ்வு மிகவும் தனிப்பட்ட முறையில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே நடைபெறவுள்ளது. திரையுலகை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு, மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன் போன்ற தெலுங்கு திரையுலக ஜாம்பவான்களும், அரசியல் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். 2018 முதல் இவர்களது காதல் குறித்த செய்திகள் உலா வந்த நிலையில், தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

Advertisement