Page Loader
வைரல் வீடியோ: 'மல்லிப்பூ' பாடலை பாடும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்
மல்லிப்பூ பாடலை பாடும் நடிகை அனுபமா

வைரல் வீடியோ: 'மல்லிப்பூ' பாடலை பாடும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 15, 2023
08:03 pm

செய்தி முன்னோட்டம்

சிம்பு நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் உள்ள 'மல்லிப்பூ' என்ற பாடல் பலராலும் விரும்பப்பட்டது. இந்த பாடலை தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் பாடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனுஷின் 'கொடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் தான் இந்த அனுபமா. இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெற்ற இந்த 'மல்லிப்பூ' பாடலின் வீடியோ, யூடியூபில் பல மில்லியன் வியூக்கள் பெற்று இருந்தது. அதோடு மட்டுமல்லாமல், சமூக வலைத்தளத்தில், இந்த பாடலுடன் போடப்படும் ரீல்ஸ்களும் பல லைக்குகள் பெற்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த பாடலை பாடியவர் மதுஸ்ரீ.

ட்விட்டர் அஞ்சல்

மல்லிப்பூ பாடலை பாடும் நடிகை அனுபமா