
பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு 21 லட்ச ரூபாய்க்கு வாட்ச் அணிந்து வந்த விக்ரம்
செய்தி முன்னோட்டம்
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோவை, சென்னை என தொடங்கிய 'சோழா டூர்', டெல்லி, கொச்சின் என சென்று கொண்டிருக்கிறது.
இதற்காக படத்தின் முக்கிய நடிகர்கள், விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இந்த பணியில் பிஸியாக உள்ளனர்.
போகும் இடமெல்லாம், படத்திற்காக மட்டுமின்றி, இந்த நட்சத்திர பட்டாளத்தை காண கூட்டம் அலைமோதுகிறது எனலாம்.
நடிகர்களும், நடிகைளும், ஏகா லகானி என்ற ஆடை வடிவைப்பாளர் வடிவமைத்த ஆடைகளில் ஸ்டைலிஷாக வலம் வரும் வருகின்றனர்.
card 2
விக்ரம் அணிந்திருக்கும் வாட்சின் விலை....!
இந்த வேளையில், நடிகர் விக்ரம் அணிந்திருந்த வாட்ச் பலரின் கண்ணை கவர்ந்தது.
சும்மா விடுவார்களா இணையவாசிகள்?!
அதை தேடி எடுத்து, தற்போது அதன் ஒரிஜினல் விலையையும் பதிவிட்டு, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
வாட்ச்சிற்கு பெயர்போன சுவிட்சர்லாந்தின், ஹியூப்லோட் பிராண்ட் வாட்ச் தான், விக்ரம் அணிந்துள்ளார்.
குறிப்பாக, big bang meca-10 என்கிற மாடல் என இணையவாசிகள் கண்டுபிடித்துவிட்டனர்.
அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், அதன் விலை தெரியுமா?
இந்திய மதிப்பில், சுமார் 21, 29, 700 ரூபாய்.
அதை பார்த்த சிலர், "மணி பார்ப்பதற்கு எதற்கு இவ்வளவு காஸ்டிலி வாட்ச்?" என கேள்வி கேட்டு வருகின்றனர். வேறு சிலரோ, "பார்ப்பதற்கு இவ்ளோ சிம்பிளா இருக்கே, இது போய் இவ்வளவு காசா?" எனவும் கேட்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
காஸ்ட்லி வாட்சுடன் ஸ்டைலிஷ் விக்ரம்
Man and his swag 🔥@chiyaan #ChiyaanVikram #PonniyinSelvan2 #PS2 #PonniyinSelvan #Vikram #AdithaKarikaalan #Galatta pic.twitter.com/Mv9cmkfyEL
— Galatta Media (@galattadotcom) April 20, 2023