Page Loader
தமன்னாவிற்காக அவர் காதலன் மீறிய தடை இதுதான் 
நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் விழுந்த நடிகை தமன்னா

தமன்னாவிற்காக அவர் காதலன் மீறிய தடை இதுதான் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2023
09:47 am

செய்தி முன்னோட்டம்

நடிகை தமன்னா, கோலிவுட் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் தற்போது பிரபலமான நடிகையாகியுள்ளார். குறிப்பாக 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ' என்ற வெப் தொடர் மூலமாக ரசிகர்கள் மனதை கிறங்கடித்தார். தொடர்ச்சியாக 'ஜீ கர்டா' என்ற படத்தில், அதீத கவர்ச்சியாக நடித்ததில், பலருக்கும் அதிர்ச்சி தான். காரணம், தமன்னா முத்த காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்சிகளில் நடிப்பதற்கு இதுவரை விதித்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி நடித்திருந்தார். அது போதாதென்று, 'ஜெயிலர்' திரைப்படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி, பலரையும் ஆட்டம் போட வைத்தார். இதனிடையே, 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' தொடரில் தன்னுடன் நடித்த விஜய் வர்மா என்ற நடிகருடன் காதலில் விழுந்தார் தமன்னா

card 2

விஜய் வர்மாவுடன் காதலில் தமன்னா

நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர், ஒரு பேட்டியில் ஒத்துக்கொண்டார் தமன்னா. தான் அவருடன் இருக்கும்போது மகிழ்ச்சியாக உணருவதாக அவர் கூறியிருந்தார். இதனிடையே, விஜய் வர்மா தற்போது ஒரு பேட்டியில், தமன்னாவிற்க்காக தான் கொண்ட கொள்கைகளிலிருந்து விலகியிருப்பதாக கூறினார். அதாவது, விஜய் வர்மா நடிக்க வந்த புதிதில், சினிமா துறையில் இருக்கும் எவரையும் காதலிப்பதோ, திருமணம் செய்வதோ கூடாது என்ற கொள்கை கொண்டிருந்தாராம். காரணம், அவருக்கு சினிமா துறையில் இருந்தவர்கள் மீது பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லையாம். தற்போது தமன்னாவை சந்தித்த பிறகு, அந்த கொள்கையிலிருந்து மாறிவிட்டதாக அவர் கூறியுள்ளார். அதோடு, தமன்னா போல ஒரு சின்சியர் நடிகையை தான் கண்டதில்லை என காதலிக்கு செர்டிபிகேட் தந்துள்ளார் விஜய் வர்மா