Page Loader
வந்தாச்சு பிக் பாஸ் 8: அக்டோபர் 6 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பு
வந்தாச்சு பிக் பாஸ் 8!

வந்தாச்சு பிக் பாஸ் 8: அக்டோபர் 6 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 24, 2024
02:52 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் அக்டோபர் 6 முதல் துவங்குகிறது. இந்தமுறை புது தொகுப்பாளருடன் களமிறங்கும் இந்த நிகழ்ச்சி குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். காரணம், இத்தனை ஆண்டுகளாக 'ஆண்டவர்' கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவருக்கு இருக்கும் திரைப்பட பணிகள் காரணமாக இந்த சீசனை அவர் தொகுத்து வழங்க முடியாது எனத்தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அவர் இடத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி களமிறங்குகிறார். அவர் ஆண்டவர் பாணியில், தவறுகளை தட்டி கேட்பாரா என்பதை பார்க்க பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் வாரத்தோடு நிறைவு பெறும் நேரத்தில், அந்த இடத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கப்பட இருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

போட்டியாளர்கள்

பிக் பாஸ் தமிழ் 8 போட்டியாளர்கள் யார்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்சியில் பங்கேற்க உள்ளதாக 15 போட்டியாளர்களின் பெயர்கள், விவரங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர், நடிகர் ரஞ்சித், விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்து பிரபலமான நடிகை சச்சிதா, நடிகர் ரியாஸ் கான், தொகுப்பாளர் ஜெகன், 'குக்கு வித் கோமாளி' சுனிதா, 'சர்பட்டா' படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளர் ஜாக்குலின் தொடங்கி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் செந்தில், சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் வினோத் பாபு, பவித்ரா ஜனனி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.