OTT வெளியீடு: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14 அன்று வெளியான 'மகாராஜா' திரைப்படம், வெளியானதிலிருந்து ₹65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. விமர்சனரீதியாகவும் இப்படம் நேர்மறை வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமான இந்த 'மகாராஜா', வரும் வெள்ளி (ஜூலை 12) முதல், நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியிடப்பட உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 'மெர்ரி கிறிஸ்துமஸு'க்குப் பிறகு சேதுபதியின் இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வெளியீடாகும் இந்த படம்.
'மகாராஜா' OTT வெளியீட்டு தேதி
முன்னதாக படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதி நன்றி தெரிவித்தார்
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதியுடன், பாலிவுட் இயக்குனர்- நடிகர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், 'நட்டி' நட்ராஜ், சிங்கம்புலி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள மஹாராஜா படம் ரசிகர்களால் பரவலாகப் பாராட்டப்பட்டது. முன்னதாக, விஜய் சேதுபதி இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தார், "மாநிலத்திற்கு [தமிழ்நாடு] வெளியில் கிடைத்த அமோக வரவேற்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறினார். "படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் மீதும் மக்கள் அன்பைப் பொழிகிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை!" என்றார். மகாராஜாவைத் தொடர்ந்து, விடுதலை- 2 திரைப்படம், விஜய் சேதுபதியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். விடுதலை 2 படத்தின் தயாரிப்பாளர்கள் 2024 தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிட இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.