NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வலைத்தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வலைத்தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா?
    நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம்

    தி பேமிலி மேன் இயக்குனர்களின் புதிய வலைத்தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா?

    எழுதியவர் Saranya Shankar
    Jan 07, 2023
    11:53 am

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜ் நிதிமோரு மற்றும் கிருஷ்ணன் டிகே அவர்கள் ராஜ் & டிகே என்ற பெயரில் தி பேமிலி மேன் என்கிற ஹிந்தி வலைத்தொடரை இயற்றினர்.

    இது இந்தியாவில் உருவான பிரபல வலைத்தொடர்களில் ஒன்றாகும். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டது.

    அதில் ஈழத்தின் போராளிகளையும் அவர்களின் தலைவர்களையும் பற்றியும் தவறாக சித்தரித்ததாக பல சர்ச்சைகள் எழுந்தன.

    தற்போது இவர்கள் ஹிந்தியில் 'பார்சி' எனும் மற்றொரு வலைத்தொடர் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஷாஹித் கபூர், ரெஜினா காசண்ட்ரா, ராஷி கண்ணா, கே.கே. மேனன், அமோல் பலேகர், புவன் அரோரா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    புதிய வெப் சீரிஸ்

    அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் விஜய் சேதுபதியின் வெப் சீரிஸ்

    இந்த வலைத்தொடர் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி வெளியாகிறது.

    க்ரைம் திரில்லராக வெளிவரவிருக்கும் இத்தொடரில் விஜய் சேதுபதி தெருக்கூத்து கலைஞனாக நடிக்கிறார்.

    கார்பரேட் நிறுவனங்களை எதிர்க்கும் தெருக்கூத்து கலைஞனின் கதையாக இத்தொடர் வரப்போகிறது.

    இது குறித்து இயக்குனர் ராஜ் & டிகே அவர்கள் கூறியதாவது; "தி பேமிலி மேன் தொடரின் வெற்றி கூட்டணிக்கு பிறகு எங்களின் அடுத்த தொடருக்காக மீண்டும் அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இது எங்களுக்கு மிகவும் பிடித்த, மனதிற்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும்.

    தி பேமிலி மேன் தொடருக்கு பிறகு மற்றொரு தனித்துவமான, அற்புதமான உலகத்தை கொண்டு வர எங்களுக்குளேயே நாங்கள் சவால்களை விட்டுக் கொண்டோம்" என கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெப் சீரிஸ்
    பாலிவுட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வெப் சீரிஸ்

    பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்? திரைப்பட துவக்கம்
    2022 ஆம் ஆண்டில் IMDb -ல் இடம் பெற்றுள்ள டாப் 10 வெப் சீரிஸ் தமிழ் திரைப்படங்கள்
    இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் OTT ரிலீஸ்கள் ஓடிடி
    2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ் ஓடிடி

    பாலிவுட்

    போனி கபூரின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே - ஹீரோ யார் தெரியுமா? திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025