
கவுண்டமணியின் வாழைப்பழ காமெடியை ரீகிரியேட் செய்த விஜய்; வைரலாகும் துப்பாக்கி படத்தின் டெலீட்டட் சீன்
செய்தி முன்னோட்டம்
AR முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது.
விஜய்யின் திரை வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரும் திருப்புனையாக அமைந்தது.
மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி' ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி அடைந்ததை தொடர்ந்து இப்படமும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் உள்ள நீக்கப்பட்ட காட்சி ஒன்றை அதன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
அதில், நடிகர் விஜய், கவுண்டமணியின் பிரபல காமெடியான வாழைப்பழ காமெடியை ஹிந்தியில் பேசி நடித்து காட்டியதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
'துப்பாக்கி' படத்தின் நீக்கப்பட்ட காட்சி
In deleted scenes from Thuppakki, Captain Jagadeesh mimics Goundamani-Senthil comedy to delight the Mumbai police! 🎭#Thuppakki https://t.co/f9DDtuIYX7
— A.R.Murugadoss (@ARMurugadoss) June 10, 2024