விஜய் 69 படப்பூஜை, விரலில் GOAT மோதிரம், பரபரக்கும் மாநாட்டு களம்: அதிரடியாக களமிறங்கும் விஜய்
செய்தி முன்னோட்டம்
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதனை படத்தயாரிப்பினர் இன்று ஒரு GIF மூலம் உணர்த்தினர்.
இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார்.
மேலும் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இதில் நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அதோடு இன்று விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான பூமிப் பூஜையும் இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்த விஜய், கட்டுப்பாடுடன் மற்றும் பக்குவத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
மோதிரம்
GOAT மோதிரம் அணிந்தபடி போஸ் கொடுத்த விஜய்
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம், X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கோட் என பெயர் பொறிகப்பட்ட மோதிரத்தை அணிந்துள்ள விஜய், மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் இந்த மோதிரத்தை தனது 69வது படத்தின் பூஜைக்கு வந்தபோது அணிந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த மோதிரத்தை பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கோட் படத்தில் நடித்தவருமான T. சிவா, கோட் படத்தின் பிரமாண்டமான வெற்றியை கொண்டாடும் வகையில், விஜய்க்கு இந்த மோதிரத்தை பரிசளித்துள்ளார்.