LOADING...
விஜய் 69: ஜனநாயகன் அப்டேட் வெளியாகியுள்ளது!
ஜனநாயகன் அப்டேட் வெளியாகியுள்ளது!

விஜய் 69: ஜனநாயகன் அப்டேட் வெளியாகியுள்ளது!

எழுதியவர் Venkatalakshmi V
Jun 03, 2025
12:19 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முழுநேர அரசியலில் ஈடுபடும் முன்னர் தனது திரைப்பட பணிகளை விரைந்து முடித்து வருகிறார் விஜய். 2026 தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் விஜய், இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனவும் கூறினார். அவரது கடைசி படமாக ஜனநாயகன் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, வலிமை என மக்கள் விரும்பும், பொதுநலன் சார்ந்த படங்களை எடுக்கும் ஹெச்.வினோத், 'ஜனநாயகன்' மூலம் விஜயின் அரசியல் பயணத்திற்கு ஒரு பூஸ்ட் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அடுத்த அறிவிப்பு

விஜய் பிறந்தநாளுக்கு மிகப்பெரிய அடுத்த அறிவிப்பு?

படத்தின் பேட்ச்ஒர்க், பாடல் உள்ளிட்ட மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், நடிகர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று மாபெரும் அப்டேட் எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனநாயகனின் படப்பிடிப்பு கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்கியது. சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. KVN புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தபடி, இந்த படம் 2026 ஜனவரி வெளியாகக்கூடும்.