
விஜய் பிறந்தநாள் சிறப்பு கொண்டாட்டமாக இன்று வெளியாகிறதா 'ஜனநாயகன்' குறித்த அப்டேட்?
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் தனது 51வது பிறந்த நாளை மறுநாள் ஜூன் 22 அன்று கொண்டாட உள்ளார்.
இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் விஜய்யின் மக்கள் இயக்கம் தொண்டர்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு விழாக்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர்.
இதோடு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் விஷயம் ஒன்று — 'ஜனநாயகன்' திரைப்பட அப்டேட்!
அதன் ஒரு பகுதியாக இன்று மாலை 6 மணிக்கு ஜனநாயகன் படம் குறித்து ஒரு அப்டேட் வெளியாகவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
அதற்கேற்றாற்போல, இன்று X -இல் 'ஜனநாயகன்' என ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JanaNayagan today 6 PM 🔥💥💥 pic.twitter.com/fTEBzt0qVS
— Rajasekar (@sekartweets) June 20, 2025
விவரங்கள்
'ஜனநாயகன்' - விஜய்யின் கடைசி படம்?
விஜய் நடிக்கும் 69வது படமான 'ஜனநாயகன்', அவர் திரையுலக பயணத்தில் இறுதியானதாக பேசப்படுகிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் இப்படம், சமூக அரசியல் பின்னணியுடன் உருவாகி வருகிறது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
அதோடு படத்தின் முக்கிய வில்லனாக, பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் தவிர, பிரகாஷ் ராஜ், ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி, ரேவதி, பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவினை சத்யன் சூரியன் மேற்கொள்கிறார்.
இப்படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத்.
படத்தின் சண்டை காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார்.
'ஜனநாயகன்' திரைப்படம் வரும் 2026 பொங்கல் அன்று வெளியாகியுள்ளது.